அம்மா இல்லாம ஒரு பொம்பள பிள்ளைய..மகளை பற்றி பேசும் போது கதறி அழுத முத்து | Madurai Muthu

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பலருடைய வாழ்க்கை மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. சின்னத்திரை வெள்ளித்திரை என வரிசையாக படங்களும் வாய்ப்புகளும் பெயரும் புகழும் குவிந்த வண்ணம் உள்ளது.

அம்மா இல்லாம ஒரு பொம்பள பிள்ளைய..மகளை பற்றி பேசும் போது கதறி அழுத முத்து | Madurai Muthu 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் சீசன் 2வில் குக் ஆக வந்தவர் தான் மதுரை முத்து. இந்த பெயரை தெரியாத நபர்களே தமிழ்நாட்டில் இருக்க முடியாது என்று கூட சொல்லலாம். சன் டிவியில் ஒளிபரப்பான அசத்த போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆனார். Stand Up காமெடியன் ஆக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பல ரசிகர்களை பெற்றார். மதுரை பேச்சு வழக்கில் இவர் சொல்லும் காமெடிகள் வேற லெவெலில் இருக்கும். ஒரு சின்ன இடைவெளி இல்லாமல் பட்டாசு போல காமெடி மழையாய் இருப்பார் மதுரை முத்து. சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மனைவியுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் மனைவியை இழந்தார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

அம்மா இல்லாம ஒரு பொம்பள பிள்ளைய..மகளை பற்றி பேசும் போது கதறி அழுத முத்து | Madurai Muthu 2

விளம்பரம்

இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். குக் வித் கோமாளி சீசன் 2வில் இவர் குக்காக கலந்து கொண்டார் எனினும் ஒழுங்காக சமைக்காத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார். ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளின்படி மீண்டும் guest ரோலாக அனைத்து எபிசோடுகளிலும் பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தற்போது சூப்பர் டாடி என்ற விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உள்ளார். அதில் அவர் பேசும் போது என் பெண் பிள்ளை உடை மாற்றும் போது பின்னால் பட்டன் போட முடியாமல் கஷ்டப்பட்டாள் என்று அம்மா இல்லாத கஷ்டத்தை கூறி அழுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Video Below…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment