The Indian Times

நண்பா வாடா நான் உனக்கு சமைச்சி தாரேன்… ADK-க்கு பிரியாணி செய்துகொடுத்து VJ மகேஸ்வரி

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் விஜே மகேஸ்வரி.அங்கிருந்து படிப்படியாக பிற சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக உருவெடுத்தார்.பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் இவர்.மேலும் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தொகுப்பாளினியாக இருந்த காலகட்டத்திலேயே ரசிகர்கள் இவருக்கு அதிகம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மகேஸ்வரிக்கு திருமணம் ஆகி பையன் இருக்கிறார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகனை தனது உழைப்பில் படிக்க வைத்து வருகிறார்.தற்போது மகேஸ்வரிக்கு பிக் பாஸ் 6 வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.போட்டியாளர்களிடம் தற்போது சண்டையை ஆரம்பிப்பதே மகேஸ்வரியாகத்தான் இருந்தார்.மகேஸ்வரி நன்றாக விளையாடி வந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.மகேஸ்வரி சென்ற பின்பு நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைய தொடங்கியது.

இந்நிகழ்ச்சி முடிந்தாலும் இதில் ஒரு சிலருடன் இன்னும் நட்பை தொடர்ந்து வருகிறார் மகேஸ்வரி.அதன்படி ஏடிகே மற்றும் ராமை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு தனது கையால் பிரியாணி செய்து கொடுத்து அசத்தியுள்ளார் மகேஸ்வரி.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஏடிகே.இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இவர்களின் நட்பினை அதிகமாக பாராட்டி வருகின்றனர், பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி மகேஸ்வரி சண்டையிட்டாலும் உண்மையிலேயே அவருக்கு நல்ல மனம் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in