The Indian Times

போலீசிடம் இருந்து தப்பிக்க குடும்பத்துடன் PLAN போடும் சரவணன்…. ராஜா ராணி 2 PROMO

நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி சீரியல் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்திற்கு உடனடியாக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் போல எந்த நாடகத்திற்கு இதுவரை இவ்வளவு கூட்டம் சேர்ந்தது இல்லை.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் வெற்றியையும் தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் ஆல்யாவும் சித்துவும் நடித்து வந்த நிலையில் ஆல்யா கர்ப்பமாகியதால் அவர் நாடகத்தினை விட்டு வெளியேறினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது சந்தியாவாக ஆஷாகௌடா நடித்து வருகிறார்.முதல் பாகத்தினை போலவே இரண்டாவது பாகத்திற்கும் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.அதிகளவு குடும்பத்தலைவிகளை இந்த நாடகம் கவர்ந்துள்ளது.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் பட்டியலில் இந்த தொடரும் இணைந்துள்ளது.தற்போது நாடகம் விறுவிறுப்பாக சூடுபிடித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு கூடி வருகிறது. தற்போது பார்வதியின் கணவரை வெற்றி கட்டிபோட்டுக்கொண்டு பார்வதியை வரவழைத்து அவரிடம் தவறாக நடக்க முயல்கிறார்.அந்த சமயம் சரியானா நேரத்தில் வந்த சிவகாமி வெற்றியை கட்டையால் அடித்து கொ லை செய்கிறார்.தாய் சிவகாமி செய்த இந்த தவறை மறைகிறார் சரவணன்.

தற்போது இந்த தொடரின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் இந்த வழக்கில் புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக சரவணனிடம் சொல்லிக்கொண்டு செல்லவே ,சரவணன் உடனே குடும்பத்துடன் போலீசில் இருந்து தப்பிக்க திட்டமிடுகிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் ஐபிஎஸ்க்கே சவால் விடுகிறார் அடடே சூப்பர் என கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in