உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் வலம் வருபவர்.தயாரிப்பாளர் ஆன இவர் முதல் முறையாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கினார் உதயநிதி.பல வெற்றி படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவை கலக்கியுள்ளார்.தற்போது அரசியலில் களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்று ஆல் ரவுண்டர் ஆக கலக்கி வருகிறார்.
இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து அண்மையில் வெளியாகிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த உதயநிதி தற்போது சீரியசான கதாபாத்திரங்களில் களம் இறங்கி வெற்றியும் கண்டு வருகிறார்.அதேபோல் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தினை தயாரித்து நடித்தும் உள்ளார்
உதயநிதி தற்போது சீரியசான கதைகளை தேர்ந்தெடு நடித்து வருகிறார்.அதன்படி தற்போது இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்,மேலும் இப்படத்தினை இவரே தயாரித்தும் உள்ளார்.இது உதயநிதியின் கடைசி படம் ஆகும்,இப்படத்தில் வடிவேலு,பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.நேற்று இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படம் நேற்று வெளியாகிய முதல் நாளிலேயே உலகளவு 10 கோடி ரூபாய் வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in