மச்சான்.. Ball போடுடா.. நண்பனுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய புகழ் | Pugazh | Natraj

தமிழகத்தில் உள்ள மூலை முடுக்கெல்லாம் சனி, ஞாயிறு ஆனாலே டிவியில் ஒலிக்கும் ஒரு தொடர் குக் வித் கோமாளி. டிவியில் பார்க்க மறந்தால் கூட ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் உண்டு. தமிழ் தெரியாதவர்களுக்கு கூட அந்த நிகழ்ச்சி சென்று சேர்ந்துள்ளது என்றால் அது மிகையில்லை. அதில் முக்கியமான ஒருவர் தான் பரட்டை புகழ். உடல் பாவனைகளாலும், எக்பிரசன்ஸ் மற்றும் Counter கொடுத்தே பலரை சிரிக்க வைப்பவர்தான் புகழ். கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கியவர். மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்து இன்று உயர்ந்துள்ளார்.

மச்சான்.. Ball போடுடா.. நண்பனுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய புகழ் | Pugazh | Natraj 1

விளம்பரம்

தற்போது புகழ் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழகத்தின் முண்ணனி நடிகர்களான அஜித்துடன் இணைந்து வலிதை படத்திலும், சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இது போக பல படங்களில் கமிட் ஆகி உள்ளதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அவரால் வர முடியவில்லை. இவரைப் போன்றே மிக எளிய பிண்ணனியில் இருந்து பெரிய உயரத்தை அடைந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜ். இவருடை தாயார் ரோட்டு கடையில் சிக்கன் 65 போட்டு விற்பனை செய்து வந்தார். மகன் பெரிய கிரிக்கெட் வீரர் ஆனபோதும் கூட தனது ரோட்டுக் கடையை அவர் தொடர்ந்து நடத்தி உழைத்து வருகிறார். Youtube Video Code Embed Credits: Parattai Pugazh

மச்சான்.. Ball போடுடா.. நண்பனுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய புகழ் | Pugazh | Natraj 2

விளம்பரம்

தற்போது புகழை பார்க்க வேண்டும் என்று நடராஜ் கேட்டுக் கொண்டதால் புகழ் நடராஜின் ஊருக்கு கிளம்பி சென்றுள்ளார். அங்கு புகழுக்கு பிரியாணி விருந்து எல்லாம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த வீடியோவில் நடராஜ் நெகிழ்ச்சி செய்தி ஒன்றை கூறியுள்ளார். அதில் தனது பழைய வீட்டில் கழிவறை கூட கிடையாது என்றும் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் கூறினார். மேலும் நடராஜும் அவரது அண்ணனும் இணைந்து ஒரு மைதானத்தை தயார் செய்து வருகின்றனர். அதில் கிராமத்தில் இருக்கும் ஏழை மாணவர்கள் கிரிக்கெட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு பயிற்சி கொடுக்க சொந்த செலவில் தயார் செய்து வருகின்றனர். அதில் புகழுக்கு நடராஜ் பந்து போட இருவரும் விளையாடுகின்றனர். அந்த அழகிய வீடியோவை நீங்களும் காண…Watch the Below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment