ஸ்ரீலங்காவை சேர்ந்தவர் ADK என்கிற தினேஷ் கனகரத்தினம். பாடல் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தமிழகம் வந்து சினிமாவில் வாய்ப்பு தேட .தொடங்கினார்,அப்படிதான் இவருக்கு விஜய் ஆண்டனி இசையில் பாட வாய்ப்பு கிடைத்தது. ஆத்திச்சு என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவுக்கு பாடகராக அறிமுகம் ஆகினார்.இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட் அடித்தது.இப்பாடலை தொடர்ந்து பலராலும் அறியப்பட்ட ராப் பாடகர் ஆக உருவெடுத்தார் ஏடிகே.அடுத்ததாக தளபதி விஜயின் வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி இசையில் மீண்டும் ஒரு சின்னதாமரை படத்தில் ராப் வரிகளை பாடி அசத்தினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவரின் திறமையை தெரிந்துகொண்ட இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இவருக்கு கடல் படத்தில் மகுடி எனும் பாடலை பாட வாய்ப்பு வழங்கினார்,இப்பாடல் பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட் அடித்தது.இப்படி தமிழ் சினிமாவின் பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி அசத்தியுள்ளார்.ஏடிகே.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே,இதில் கலந்துகொண்டால் தனது திறமையை வெளிக்காட்டி மக்களிடம் எளிதாக அறிமுகமாகி வரவேற்பினை பெறலாம் என நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தனது சிறப்பான விளையாட்டையும் விளையாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ராமசாமி உடன் இணைந்து தற்போது ஊர்கிழவி என்ற ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார்.இப்பாடலை எழுதி அதனை பாடியும் உள்ளார் ஏடிகே,மேலும் இதில் ராமசாமியும் சில வரிகள் பாடி அசத்தியுள்ளார்.இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பாடல் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed video credits : ADK