The Indian Times

சரத்குமார் மீண்டும் ஆக்ஷனில் அசத்தும் பரம்பொருள் பட டீசர் வெளியாகியது

நடிகர் சரத்குமார் 90 களில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் .பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர்.ஆரம்பத்தில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக நடித்து அசத்தி மக்களை கவர்ந்தார்.வில்லன் கதாநாயகன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி சினிமாவையே அசத்தினார்.

1990 ஆம் ஆண்டு புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சரத்குமார்.தனது கடின முயற்சியினால் கிடைக்கும் வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் சரத்குமார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Embed Video Credits : U1 RECORDS

இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தந்தது.மேலும் அதனை தொடர்ந்து மூவேந்தர் சூர்யவம்சம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர்.

தற்போது இவர் போர் தொழில் படத்தில் நடித்துள்ளார்,இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இப்படத்தினை தொடர்ந்து தற்போது இயக்குனர் அரவிந் ராஜ் இயக்கத்தில் பரம்பொருள் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in