மக்களை காப்பாற்றினானா மாவீரன் – முழு திரைவிமர்சனம் (?/5)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்,இவர் நடிப்பிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் மண்டேலா பட இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார் வில்லனாக மிஸ்கின் நடித்துள்ளார்.சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது பரத் சங்கர் இப்படத்திற்கு இசைமைத்துள்ளார் மேலும் இப்படத்தில் யோகி பாபு,நடிகை சரிதா,சுனில் மற்றும் குக் வித் கோமாளி மோனிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.தற்போது இப்படத்தின் விமர்சனத்தினை கீழே விரிவாக காணலாம்.

மக்களை காப்பாற்றினானா மாவீரன் - முழு திரைவிமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

பத்திரிகையில் ஓவிய கதைகளை எழுதுபவராக வருகிறார் சிவகார்த்திகேயன்.இவர் வரையும் ஓவியம் தான் மாவீரன் இந்த ஓவியத்தின் மூலம் தான் நினைக்கும் வெளிப்பாடுகளை ஓவியமாக வரைந்து மாவீரன் மூலம் மக்களை காப்பாற்றுவது போல வரைந்து வருகிறார் சிவகார்த்திகேயன்,ஓவியத்தில் மட்டும் தைரியம் காட்டும் சிவகார்த்திகேயனுக்கு நிஜ வாழ்க்கையில் தைரியம் என்பது சிறிதும் இல்லாமல் உள்ளது.எந்த பிரச்னை வந்தாலும் பயந்த சுபாகத்துடன் ஒதுங்கி செல்கிறார் சிவகார்த்திகேயன்.இப்படி ஒரு பக்கம் இருக்க அரசியல் சார்ந்த பிரச்சனைகள் சிவாவை தேடி வருகிறது.படத்தில் அமைச்சராகவும் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும் என்ட்ரி கொடுக்கிறார் மிஷ்கின். சாதாரண பயந்த சுபாகமுள்ள சிவா அரசியல் பிரச்சனைகளில் இருந்து எப்படி தப்பித்தார்,மக்களை காப்பாற்ற மாவீரனாக சிவகார்த்திகேயன் ஆகி காப்பாற்றினாரா? என்பதே மீதி படத்தின் கதை

விளம்பரம்

மக்களை காப்பாற்றினானா மாவீரன் - முழு திரைவிமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

மீண்டும் ஒரு முறை நல்ல நடிகர் என்பதை சிவகார்த்திகேயன் நிரூபித்து விட்டார்.பயந்த சுபாவத்துடன் சிவகார்த்திகேயன் வந்து பேசும் வசனங்கள் பின்னர் மாவீரனாக வந்து சிவகார்த்திகேயன் செய்யும் விஷயங்கள் தியேட்டரில் கைதட்டுக்களை ஒலிக்க வைத்துக்கொண்டே இருக்கிறது.இதற்கு முன்பு வெளியாகிய படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்க வில்லை அதையும் சேர்த்து உடைத்தெறிந்து இப்படம் என்று சொல்லலாம்.படத்தில் மாவீரன் குரலாக வரும் விஜய் சேதுபதி ரசிகர்களை மேலும் புல்லரிக்க வைக்கிறது.மிஷ்கின் நடிப்பு பாராட்டுக்குரியது.அதேபோல் நடிகை சரிதாவின் அனுபவ நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.யோகி பாபு காமெடி படம் முழுவதும் ஒர்கவுட் ஆகி இருப்பது ரசிகர்களை பெருமளவு ரசிக்க செய்துள்ளது.கதாநாயகியாக தனக்குரிய கதாபாத்திரத்தினை சரியாக நடித்துள்ளார் அதிதி சங்கர்.பரத் சங்கர் பாடல் மற்றும் பின்னணி இசை படத்தினை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்கிறது என்றே கூறலாம்.வில்லனின் கதாபாத்திரத்தினை இன்னும் ஆழமாக காமித்திருக்கலாம் அதே போல படத்தில் அதிதி சங்கரின் பல காட்சிகளை குறைத்திருக்கலாம் என்பது போல உணரவைக்கிறது.ஆங்காங்கே சில தொய்வுகள் படத்தின் வேகத்தினை குறைத்துள்ளது ஆனால் இது குறை என்பது இல்லை

மாவீரன் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் 3/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment