The Indian Times

மிரட்டலாக வெளியாகியது புஷ்பா 2 படத்தின் FIRST SINGLE

தெலுங்கு சினிமாவும் தற்போது தரமான படத்தினை உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக கொடுக்க தொடங்கிவிட்டனர்.அந்த வரிசையில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய படம்தான் புஷ்பா .சாதாரண மனிதன் எப்படி கேங்ஸ்டர் ஆகுகிறான் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை தான் இந்த படத்தின் கதைக்களம்.இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்ட இப்படம் முதல் பாகம் மட்டும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.இறுதி கட்டத்தில் பகத் பாசில் போலீசாக வந்து கலக்கி இருப்பார்.இந்நிலையில் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement

இப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் மற்றும் சண்டை காட்சிகள் என அனைத்திலும் விறுவிறுப்பினை காட்டி இருப்பார் இயக்குனர் சுகுமார்.முதல் பாகத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியாகிய அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான்,அதிலும் குறிப்பாக சமந்தா ஆடிய ஊ சொல்றியா பாடல் ஏகோபித்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இரண்டாம் பாகத்தில் வில்லன் ஆக பகத் பாசில் தான் வருவார் என ரசிகர்களால் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு உள்ளது.தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

Embed Video Credits : T SERIES TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in