நடிப்பின் மீது ஆர்வம் உள்ள ரட்சிதா வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்த நிலையில் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திவிடுவோம் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை ரக்ஷிதா.அதன்பின் இவர் பல நாடகங்களில் நடித்தார் .பல நாடகங்கள் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை தொடர்ந்து போராடிய ரட்சிதாவிற்கு இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் வாய்ப்பு கிடைத்தது.இந்த தொடரில் மீனாட்சியாக நடித்து அசத்தி இருந்தார்.இந்த தொடரில் இவருக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த நாடகத்தின் மூலம் இவர் தமிழக மக்களின் அனைவரது வீட்டிலும் சென்றடைந்து மிக பிரபலமாகினார்.தற்போது விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சி,கலர்ஸ் டிவி என பல சேனல்களிலும் நாடகங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரக்ஷிதா.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இந்நிலையில் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் வாய்ப்பு கிடைத்தது.யோசிக்காமல் உடனே கலந்துகொண்டார்,மேலும் பிற போட்டியாளர்களுடன் தன்னால் முயன்ற அளவுக்கு போட்டியிட்டு அசத்தினார்.தனது விளையாட்டின் மூலம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்ற ரட்சிதா பிற போட்டியாளர்களை விட குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு 13வது போட்டியாளராக வெளியேறியுள்ளார்.அவரது ரசிகர்கள் அவரின் எதிர்காலம் சிறப்பாக அமைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in