The Indian Times

நம்ம ஷிவாங்கி இந்த ஹீரோ கூட நடிக்க போறாங்களா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

விஜய் டிவி இல் ஒளிபரப்பு ஆகி வரும் குக்கு வித் கோமாளி ஷோ மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதில் வரும் கோமாளிகள் செய்யும் அரட்டை, காமெடி என்று குக்கு சமைக்க விடாம தொடர்ந்து தொந்தரவு செய்து வருவார்கள். இதை எல்லா மீறி அந்த குக் சவாலை சந்திக்க வேண்டும்.

அந்த வகையில் இங்கு பல கோமாளி தங்கள் காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். குறிப்பாக புகழ் மற்றும் ஷிவாங்கி செய்யும் அனைத்து காமெடி எல்லோரையும் ரசிக்க வைக்கிறது. இவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என்ற பாணியில் நகைச்சுவை செய்து வருகின்றனர்.

Advertisement

இதில் புகழ் ஏற்கனவே படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் தற்போது ஷிவாங்கி ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். ஆம், இவர் சிவகார்த்திகேயன் கூட அவரின் அடுத்த படமான டான் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை லைக்கா நிறுவனம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இது ஷிவாங்கி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் குழந்தை தனமாக நடந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் இப்போது படத்திலும் அதே போலவே நடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in