The Indian Times

முதல எனக்கு கல்யாணம்! அப்புறம் தான் உனக்கு – Simbu Valentines Day புலம்பல்

சிம்பு பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்த படங்களில் காதல் என்பது இன்றியமையாதது என்று தான் சொல்ல வேண்டும். எப்படி பார்த்தாலும் இவர் காதல் வைத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். Watch Simbu Video Below

இவரது சொந்த வாழ்க்கை காதல் கதை என்பது இவருக்கு கை கூடாத நிலையில் தான் இருக்கிறது. இவரும் பல வருடங்கள் பல பெண்களை காதலித்து அது கை கூடி வராமல் போய் விடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அவரே பெ‌ண்க‌ள் பற்றி வெறுப்பு நிலைக்கு வந்து பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வந்து தற்போது ஒரு இயல்பான மனநிலையில் இருக்கிறார். இப்போது பல ரசிகர்கள் மத்தியில் கல்யாணம் எப்போ சிம்பு என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இவரும் அதற்கு பதிலளிக்காமல் இல்லை காலம் வந்தால் கல்யாணம் என்ற பாணியில் நகைச்சுவை பதில் சொல்லி கொண்டு தான் இருக்கிறார்.

தற்போது காதலர் தினத்தன்று ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். அதில் தனது செல்ல பிராணி நாயை வைத்து சில நேரங்கள் பேசி இருக்கிறார். அதில், நீயும் பொண்ணு தான் உனக்கு பாய் பிரண்ட் தேவை எனக்கு கேர்ள் பிரண்ட் தேவை எனக்கு கல்யாணம் நடந்தா தான் உனக்கு உன் பாய் பிரண்ட் கிடைப்பான் என்று சொல்லி உனக்கு பாய் பிரண்ட் கிடைக்கணும் னா எனக்கு நீ கடவுள் கிட்ட கல்யாணம் ஆகணும் னு வேண்டிக்கோ என்று நகைச்சுவையாக பேசி இருக்கிறார். அது பார்பவர்களை ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in