The Indian Times

காணாமல் போன மீனாவை தேடி போலீஸ் ஸ்டேஷன் வரும் முத்து… முத்து மீது புகார் கொடுக்கும் சத்யா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிட்டி திட்டம் போட்டு முத்து குடிப்பது போல வீடியோவை இணையத்தில் வைரலாக்குகிறார். இதனை கண்டு அவர் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்து குடிக்கவில்லை என எவ்வளவோ சொல்லியும் அவரை யாரும் நம்பவில்லை. மனோஜிடம் சண்டைக்கு சென்ற முத்துவை அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளார்.தற்போது அனைவரும் மீண்டும் சேர்ந்து உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், மீனாவை காணவில்லை என முத்து ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வருகிறார். அங்கு சத்யா மீனா காணாமல் போனதற்கு முத்து காரணம் என புகார் கொடுக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in