எப்படியாச்சும் என் மகளை மீட்டு தாங்க..மகளுக்காக தாடி பாலாஜி நடத்தும் பாச போராட்டம் | Thaadi Balaji

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி நடிகராக வலம் வந்தவர் தாடி பாலாஜி. இவர் காமெடி ஜாம்பவன்களாக இருந்த வடிவேலு, விவேக் ஆகியோருடன் இணைந்து மிகப்பிரபலம் ஆனார். இவர் விவேக் உடன் இணைந்து நடித்த எலி மருந்து காமெடிக்கு இன்று வரை பெரிய வரவேற்பு இருக்கிறது. பல படங்களில் சைடு கேரக்டராக நடித்து இருப்பார். நிறைய படங்களில் நண்பர்கள் குழுவில் ஒருவராக வருவார். இருந்த போதிலும் இவரால் பெரிய அளவிற்கு காமெடி நடிகராக வர முடியவில்லை. இவருக்கும் நித்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு போஷிகா என்ற மகளும் உண்டு. படங்களில் பல பேரை சிரிக்க வைத்த தாடி பாலாஜியின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இல்லை.

எப்படியாச்சும் என் மகளை மீட்டு தாங்க..மகளுக்காக தாடி பாலாஜி நடத்தும் பாச போராட்டம் | Thaadi Balaji 1

விளம்பரம்

பல மீம் கிரியேட்டர்களின் டெம்ப்ளேட் ஆக இருக்கும் நடிகர் தாடி பாலாஜி சமீபகாலமாக படங்களில் பெரிதாய் நடிப்பது இல்லை. ஆனால் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு சென்று தொகுப்பாளராகவும் , சில காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆகவும் இருந்து வந்தார் தாடி பாலாஜி. இவருக்கும் இவரது மனைவி நித்யாவிற்கும் சண்டை ஏற்பட்டது. குடித்துவிட்டு தன்னையும்,தன் பிள்ளையும் அடித்தே கொல்லப் பார்க்கிறார் என்று போலீசிடம் குற்றம்சாட்டினார். இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து
வந்தனர். இந்த நிலையில் பட வாய்ப்புகள் பெருமளவில் குறைந்து போகவே பிக்பாஸ் என்ற விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பாலாஜி. அதில் அவரது மனைவி நித்யாவும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இருவரும் சேர்ந்து வாழக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் சண்டை அதிகமாகிக் கொண்டே போனது. Youtube video code embed credits: behindwoods tv

எப்படியாச்சும் என் மகளை மீட்டு தாங்க..மகளுக்காக தாடி பாலாஜி நடத்தும் பாச போராட்டம் | Thaadi Balaji 2

விளம்பரம்

தற்போது தாடி பாலாஜி பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாக கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த போது தன் மகள் போஷிகாவை பற்றி சக போட்டியாளர்களிடம் கூறி வந்தார். இதை கண்டித்து அவரது மனைவி நித்யாவும், போஷிகாவும் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். அதில் பேசிய போஷிகா, மீடியாவுக்காக என் மேல் பாசம் உள்ளது போன்று நடிக்காதீர்கள். நீங்கள் யார் என்று எனக்கு தெரியும். நான் இப்போது சின்ன பிள்ளை இல்லை,. இதே போல் செய்து கொண்டிருந்தால் தினமும் உங்களைப்பற்றி வீடியோ வெளியிடுவோம் என தனது தந்தையை மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். தற்போது பிக்பாஸில் இருந்து வெளியே வந்துள்ள தாடி பாலாஜி, சைல்டு லைனிடம் எப்படியாவது தனது மகளை மீட்டுக் கொடுங்கள், அவரது தாயார் நித்யா்அவரை மனதளவில் மாற்றி வைத்துள்ளார் என்றும், தனது மகளுக்கு கவுன்சிலிங் தேவை என்றும் அவரை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment