The Indian Times

சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முதன்மை இயக்குனர் சங்கர். இவர் சில படங்களே இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

காரணம் இவர் படத்தில் காட்டப்படும் பிரம்மாண்டங்கள் தான். எந்த அளவிற்கு படத்தின் கதை உள்ளதோ அதைவிட அதிகமாக படத்தின் பிரமாண்டம் இருக்கும்.

Advertisement

பல முன்னணி நடிகர்களும் இவர் நடிப்பில் ஒருமுறையாவது நடித்துவிடமாட்டோமா என ஏங்கும் அளவிற்கு உச்சத்தில் இருக்கும் இயக்குனர்.

தற்போது இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தினை இயக்கி உள்ளார்.

அதே சமயம் தமிழில் உலகநாயகனை வைத்து இந்தியன் 2 இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

அண்மையில் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

தற்போது இயக்குனர் ஷங்கர் தனது முதல் மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணத்தை கோலாகலமாக நடத்தி உள்ளார்.

பல நட்சத்திரங்களும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in