The Indian Times

தளபதி 67 டைரக்டர் இந்த வெற்றி இயக்குனர் தான்! உறுதியளிக்கும் ஜி.வி.பிரகாஷ்

Watch the video below தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இன்று இவருக்கு மிக பெரிய அளவில் மார்க்கெட் இருக்கிறது என்று அனைவர்க்கும் தெரியும். வசூல் மன்னனாக பல கோடி நெஞ்சங்களை ரசிகர்களாய் வைத்திருக்கிறார். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இதை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தை பற்றியும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை தெலுகு இயக்குனர் வம்ஷி இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளிவந்தது. இந்நிலையில் தளபதி நடிப்பில் அடுத்தப்படத்தை யார் இயக்கப்போவது என்ற பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. Watch the video below

Advertisement

அந்த வகையில் ஜி.வி.பிரகாஷ் தளபதி ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார். விஜயை வைத்து வெற்றிமாறன் இயக்குவது உறுதி. இந்த கூட்டணி விரைவில் அமையவுள்ளது. ஆனால் இருவருக்கும் அதற்கான நேரம் அமையவில்லை. கூடிய விரைவில் உறுதியாக நடக்கும் என்று விஜய் ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below

https://twitter.com/Master_Mahiii/status/1443071938994139136

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in