The Indian Times

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை.. விக்ரமின் தங்கலான் பட ட்ரைலர் இதோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம்.நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் இவர்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சாதரண நடிப்பு தானே அதற்கு இத்தனை மெனக்கெடல்கள் தேவையா என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்பவர்.1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்.தற்போது இவர் நடிப்பில் கோப்ரா படம் வெளியாகியது,இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.அதனை ஈடு செய்யும் வகையில் விக்ரமுக்கு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

Advertisement

இவர் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்காலன் படத்தில் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.கதாநாயகிகளாக பார்வதி,மாளவிகா மோகனன் நடித்துள்ளனர்.பசுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

Embed Video Credits : JUNGLEE TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in