1 பவுன் தங்க காசு..உரசி பாத்தா தகரம்..Thuglife செய்த சுயேட்சை வேட்பாளர்.! | Manimegalai | Ambur

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் என்ற சொலவடை நம் நாட்டில் உண்டு. ஏமாற்றுபவர்கள் தினுசு தினுசாக ஏமாற்றுவார்கள். சின்ன பெட்டிக்கடையில் தொடங்கி அனைத்து இடங்களிலும் இது நடப்பது உண்டு. அனைவரும் ஏமாறுவதும் இல்லை, அனைவரும் ஏமாற்றுவதும் இல்லை. ஒரு சிலர் செய்யும் இது போன்ற இழிவான செயல்களில் அனைவரையும் சந்தேக கண் கொண்டே பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது என்னவோ மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் இப்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவம் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. தேர்தலுக்கு கட்சிகள் பணம் கொடுப்பது வாடிக்கையானது தான். ஆனால் இந்த சம்பவம் சுயேட்சை தங்க
காசுகள் கொடுத்து மக்களை ஏமாற்றியது பற்றியது.

1 பவுன் தங்க காசு..உரசி பாத்தா தகரம்..Thuglife செய்த சுயேட்சை வேட்பாளர்.! | Manimegalai | Ambur 1

விளம்பரம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது மனைவி மணமேகலை வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து களத்தில் குதித்துள்ளார். ஆம்பூர் 36 வார்டு கம்பிக்கொல்லை பகுதி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மணிமேகலை மற்றும் கணவர் துரைபாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள 1000 மக்களை ஏமாற்றியுள்ளனர். தேர்தலுக்கு முதல் நாள் இரவு கம்பிக்கொல்லை பகுதிக்கு சென்ற துரைப்பாண்டி 1000 மக்களுக்கு ஒரு தங க காசை கொடுத்து தனது மனைவிக்கு வாக்களிக்குமாறு சத்தியம் வாங்கியுள்ளார். Youtube Video Code Embed Credits: Polimer News

1 பவுன் தங்க காசு..உரசி பாத்தா தகரம்..Thuglife செய்த சுயேட்சை வேட்பாளர்.! | Manimegalai | Ambur 2

விளம்பரம்

இதனை நம்பி மறுநாள் காலை ஓட்டு போட்டுவிட்டு திரும்பிய அந்த பகுதி மக்கள் கடைக்கு சென்று அந்த தங்க நாணயம் உண்மையானதுதானா என்று உரசிப் பார்த்தபோது அவை அனைத்தும் தகரம் என தெரிய வந்துள்ளது. உடனே மக்கள் அனைவரும் சுயேட்சை வேட்பாளர் மணிமேகலை மற்றும் அவரது கணவருக்கு போன் செய்துள்ளனர். போனை அனைத்து விட்டு கணவனும், மனைவியும், தலைமறைவாகி விட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த அப்பகுதி மக்கள் மணிமேகலை மற்றும் துரைபாண்டி குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரவில் வந்து தங்க நாணயங்களை கொடுத்து ஓட்டை வாங்கி ThugLife செய்த கணவன் மனைவியை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment