அமெரிக்காவில் தொடங்கிய துணிவு மற்றும் வாரிசு முன்பதிவு… யார் முதலிடம் தெரியுமா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி கமலுக்கு பின்பு அதிக ரசிகர்கள் கூட்டம் இருப்பது விஜய் மற்றும் அஜித்திற்கு தான்.அந்தளவுக்கு இருவரையும் அவர்களது ரசிகர்கள் நேசித்து வருகின்றனர்.இவர்களின் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அதன்படி இருவரின் சினிமா வாழ்க்கையிலும் தோல்விகள் மற்றும் வெற்றிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் படம் ஒரே நாளில் வெளியாக உள்ளது.இதற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS ரட்சிதா மஹாலட்சுமியின் கண்ணை கவரும் போட்டோஷூட் புகைப்படங்கள்

அமெரிக்காவில் தொடங்கிய துணிவு மற்றும் வாரிசு முன்பதிவு... யார் முதலிடம் தெரியுமா? 1

விளம்பரம்

நேற்று துணிவு முதல் ஆளாக படத்தினை வருகிற 11 ஆம் தேதி வெளியிட முடிவு செய்து அறிவிப்பினை வெளியிட்டது.துணிவு அறிவிப்புக்கு பின் அதே நாளில் வாரிசு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு விட்டிருந்தது.இதன் மூலம் அஜித் உடன் மோதும் நோக்கில் தான் விஜய் உள்ளார் என ரசிகர்களிடம் கருத்துக்கள் பரவி வருகிறது. இந்த இரண்டு படத்திலும் வெற்றிபெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது.தற்போது வெளிநாடுகளில் இரண்டு படங்களின் முன்பதிவுகளும் தொடங்கிவிட்டன.

கட்டாயம் படிக்கவும்  பூக்கடை போன கவலையில் அழும் மீனா.. ரோகிணியுடன் நக்கலாக சிரிக்கும் விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

அமெரிக்காவில் தொடங்கிய துணிவு மற்றும் வாரிசு முன்பதிவு... யார் முதலிடம் தெரியுமா? 2

விளம்பரம்

அதன்படி அமெரிக்காவில் துணிவை விட வாரிசுக்கு முன்பதிவு அதிகம் வந்துகொண்டிருந்த நிலையில் திடீரென அஜித்தின் துணிவு படத்தின் முன்பதிவு அதிகமாக தொடங்கியுள்ளது.அதன்படி வாரிசு 30 காட்சிகளில் ஆயிரம் டாலர்களை முன்பதிவில் பெற்றுள்ளது,அதே சமயம் துணிவு படம் 38 காட்சிகளில் இரண்டாயிரத்து நூறு டாலர் ரூபாயை முன்பதிவில் பெற்று அசத்தியுள்ளது.தற்போது இப்பொழுதே முன்பதிவில் போட்டிகள் தொடங்கிவிட்டது,அஜித் தான் முதல் இடத்தில் உள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment