மாறி மாறி கொழுத்திப்போடு! பிக் பாஸ் முதல் வார நாமினேஷன்!

பிக் பாஸ் ஆரம்பித்த நாள் முதலே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது எண்பத்தே நிதர்சனமான உண்மை! நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரமே ஆனதால் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அன்பு மழை பொழிந்த வண்ணம் உள்ள நிலையில், தற்பொழுது முதல் வாரத்திற்கான வெளியேற்றும் படலத்திற்கு போட்டியாளர்கள் தங்கள் சார்பில் இருவரை தேர்ந்தெடுத்து பிக் பாஸிடம் கூற வேண்டும்!Watch The Video Below!

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பெரும்பாலான போட்டியாளர்கள் இசைவாணியை குறிவைத்து உள்ளது போல் காணப்பட்டது! இதனையடுத்து அக்சரா அவர்களையும் அதிக அளவில் பரிந்துரை செய்யப்பட்டது போல் காண்பித்த நிலையில் இந்த முதல் வாரத்தில் யார் வெளியேறுவார் என்ற ஆர்வமும் ஒரு பக்கம் கூடிக்கொண்டே செல்லும் வண்ணம் உள்ளது! ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சி தொகுப்பில் போட்டியாளர்கள் இதுவரை சக போட்டியாளர்களுடன் பழகியதில் யாரை பிடிக்கும் பிடிக்காது என கேட்டு ஒன்றாக இருதவர்களுக்குள் மெதுவாக கொளுத்தி போட்ட பெருமை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் நெறியாளருமான கமல் ஹாசன் அவர்களையே சாரும்!

விளம்பரம்

கூட்டுக்குடும்பமாக ஆரம்பித்த வீட்டில் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக புகைய ஆரம்பித்துள்ளதால் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதும் நல்லவர் போல நடித்து வேஷம் களைந்து வெளியேற போகும் நபர் யார் என்றும் இனிவரும் காலங்களில் தெரியவரும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது! பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய 2வது ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்!

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment