The Indian Times

தாலி கட்டும் நேரத்தில் ஓடிய மணமகன்..65 வயது மாமனாரை கரம் பிடித்த 21 வயது பெண்.. | Bihar

நம் நாட்டில் பல விதமான காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சம் இல்லை. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் நடக்கும் காமெடி சம்பவங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டு பார்வையாளர்களை அள்ளும் யூடியூப் சேனல்கள் ஏராளம். வட இந்தியா என்று டைப் செய்தாலே Funny Marriage Video என்று யூடியூப்பே Suggestion காட்டும் அளவிற்கு பிரபலமானவர்கள் தான் வட இந்தியர்கள்.

Advertisement

மாலை போடும் போது வேஷ்டி அவிழ்த்து விழுவது, குதிரையில் அமர்ந்து மாப்பிள்ளை ஊர்வலம் செல்லும் போது தீடீரென குதிரை மிரண்டு ஓடி மாப்பிள்ளையை கீழே தள்ளி விடுவது, மேடையில் ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை உடைந்து மணமகளும், மணமகனும் கீழே விழுவது போன்ற தமாஷான நிகழ்வுகள் அரங்கேறி வரும். அது மட்டுமில்லாமல் மாலையை ஒழுங்காக போடாமல் மணமகனிடம் அறை வாங்குவது போன்றும், பாக்கெட்டில் பான் பொருட்கள் வைத்திருந்த காரணத்தால் மணமனை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த மணமகளின் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

Advertisement

தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தி விநோதமானது. பீகார் மாநிலம் சமிஸ்டிபூர் பகுதியை சேர்ந்தவர் ரோசன்லால். இவருக்கு வயது 65. இவரின் மகனுக்கும் 21 வயதான ஒரு பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் திருமணத்தன்று மணமகன் காதலியுடன் ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை, மணமகனின் அப்பாவுக்கே தனது மகளை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். அதன்படி 65 வயதான மாமனாரை 21 வயதான இளம் பெண் வேறு வழியின்றி திருமணம் செய்து கொண்டார்.  அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in