The Indian Times

மறுபடியும் காதலிப்பீர்களா? ஐஸ்வர்யா சொன்ன அதிர்ச்சி பதில் | Aishwarya Rajinikanth

தற்போது ஆல்பம் சாங் தயாரிப்பில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் மறுபடி காதலிப்பீர்களா என்று கேட்டதற்கு ஆம் நான் என் தந்தை தாய் என் மகன் ஆகியோரை காதலித்து கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண Watch the Video Below for Full News – Youtube Video Embed Code Credits: Little Talks

பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் இளைய மகன் நடிகர் தனுஷ். இவர் சிறு வயதிலேயே திரைப்படத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கி தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்த போதிலும் தற்போது பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். இவர் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா அவர்களை மணம் முடித்தார். தன்னைவிட வயதில் மூத்தவர் என்ற போதிலும் பல எதிர்ப்புகளுக்கும், சச்சரவுகளுக்கும் நடுவில் அவர் ஐஸ்வர்யாவை கரம் பிடித்தார். 18 வருடங்கள் கடந்து விட்டப் பிறகு தானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து விட்டதாகவும், மனைவியாகவும், நல்ல தோழியாகவும் இருந்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி எனவும், தாங்கள் இருவரும் இனி தனித்தனியாக தங்கள் பணத்தை தொடர உள்ளதாகவும், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் தெரிவித்து இருந்தார்.

Advertisement

Advertisement

இது தனுஷ் ரசிகர்களிடையேவும், குறிப்பாக அவரது மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. 18 வருடம் ஒன்றாக வாழ்ந்த பிறகு இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகு இவ்வாறு மணவாழ்க்கையை முறித்துக் கொள்வது ஏற்ப்புடையது இல்லை என்று ஒரு தரப்பினரும், இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று மற்றொரு தரப்பும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் சமூக வலைத்தளத்தில் இந்த தகவல் வெளியான பின்பு இதுவரை தனுஷிடம் இருந்தோ, ரஜினியிடம் இருந்தோ அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியோ, பேட்டியோ வெளியாகவில்லை.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in