2015ல் வெளியான சர்ச்சை பாடல்.. வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் | Silambarasan STR | Anirudh

நடிகர் சிம்பு ஒரு சிறந்த நடிகர். டி.ஆரின் மகனான இவர் சிறு வயதிலிருந்தே தன் தந்தையுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பும் நடவடிக்கைகளும், ஹேர் ஸ்டைலும் அப்படியே தந்தையைப் போலவே இருந்தால் மக்கள் இவர் மீதும் அன்பு காட்டினார். இவர் சமீபகாலமாக எந்த படத்தில் நடித்தாலும் அது பல சிக்கல்களுக்குப் பின் வெளியாவது வழக்கமான ஒன்றாகி போனது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும், அவரது படம் வெளியாகும் முன்பு அவரது தந்தை மற்றும் தாயார் பத்திரிக்கையாளர்களை சந்தித்து என் மகன் என்பதால் வேண்டுமென்றே அவரது படங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கின்றனர் என்று மீடியாக்கள் முன்பு பேசுவது வாடிக்கையாக மாறி போனது.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் படப்பிடிப்பில் நடு இரவில் 26 PUSHUPS எடுத்த உலகநாயகன்.. தீயாய் பரவும் வீடியோ

2015ல் வெளியான சர்ச்சை பாடல்.. வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் | Silambarasan STR | Anirudh 1

விளம்பரம்

சிம்பு அவருடைய ரசிகர்களால் எஸ்.டி.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார். அதை தொடர்ந்து அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பல போராட்டங்களுக்கு பிறகு மாநாடு படம் வெளியாகி மாபெரும் வெற்றியை அவருக்கு கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  BYE BYE THAILAND...மனைவி நயன்தாராவை கூட்டிட்டு கிளம்பிய விக்னேஷ் சிவன்

2015ல் வெளியான சர்ச்சை பாடல்.. வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் | Silambarasan STR | Anirudh 2

விளம்பரம்

2015ம் ஆண்டு நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்த பாடல் வைரலானது. பெண்களை இழிவாக சித்தரிப்பதாக கூறி இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டது. கோயம்புத்தூர் மற்றும் சென்னை என இரண்டு இடங்களிலும் வழக்கு பதியப்பட்டது. இது பர்சனல் ஆக எடுக்கப்பட்டது என்றும் அதை யாரோ தவறாக வெளியிட்டு விட்டனர் என்றும் சிம்பு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனாலும் மகளிர் அமைப்புகள் விடுவதாக இல்லை. வழக்கு பதிவு, சிம்பு வீட்டின் முன்பு போராட்டம் என சிம்புவை வறுத்து எடுத்து விட்டனர். தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.. Watch the below video…

கட்டாயம் படிக்கவும்  அக்கா உன்கூட வீடியோ பண்ணேன் வந்தேன் பாரு...தம்பிய இப்படியா பண்ணுவீங்க நிவேதா தாமஸ்...பாவம்ங்க அவரு

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment