The Indian Times

கார் புடிக்கலையா அப்போ திரும்ப கொடுத்துடுங்க.

கார் புடிக்கலையா அப்போ திரும்ப கொடுத்துடுங்க.


ஆட்ட மொபைல் நிறுவனமான KIA கார் நிறுவனம் customer satisfaction guarantee எனும் புதிய சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் திருப்தி கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தில் நீங்க KIA நிறுவனத்தில் கார்னிவல் காரை வாங்கி ஓட்டும் பட்சத்தில் அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அதை திருப்பி கொடுத்து விடலாம் என்று அறிவித்திருக்கிறது. இது கார்னிவல் அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும். இந்த கொள்கை சில நிபந்தனைகளை உள்ளடக்கியது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதையடுத்து வாங்கிய கார் உங்களுக்கு பிடிக்காதா பட்சத்தில் அந்த காரை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தால், 30 நாட்களுக்குள் மாற்ற வேண்டும் என்றும், காரில் எந்த விதமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கார் 1500 கிலோ மீட்டர் தூரம் வரை தான் சென்றிருக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் தங்கள் 95% பணத்தை திரும்ப பெற முடியும் என்று அறிவித்திருக்கிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in