The Indian Times

நீண்ட நாள் கழித்து தாத்தா முத்துராமன் சொந்த ஊருக்கு வந்த நடிகர் கவுதம் கார்த்திக்

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்.கார்த்திக்கின் நடிப்பிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 90களில் கொடிகட்டி பறந்தவர் இவர். பல நல்ல படங்கள் மற்றும் நகைச்சுவை படங்களை மக்களுக்கு கொடுத்தவர்.

இவரை போல இவரின் மகனையும் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்து தன்னை அறிமுகப்படுத்திய குரு மணிரத்தினத்திடம் கவுதமை ஒப்படைத்தார்.

Advertisement

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் கடல் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.

இப்படம் ரசிகர்ளிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இருப்பினும் தந்தையின் இடத்தினை இவர் சினிமாவில் பிடிக்கவில்லை.

இருந்தும் போராடி வருகிறார்.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்த தேவராட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை மஞ்சிமா மோகன்.இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்த நட்பு காதலாக மாறியது.இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இவர் தற்போது தனது தாத்தாவின் சொந்த ஊருக்கு வருகை தந்து உள்ளார். அவருக்கு அமர்க்களமாக வரவேற்பு அளித்து உள்ளனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in