The Indian Times

இயக்குனர் பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜின் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதி ராஜா.பல அற்புதமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தினை உயர்த்தியவர் இவர்.

நடிகர் கமல்ஹாசனை வைத்து 1977ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய படம் 16 வயதினிலே.இப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமாவுக்குள் கால்தடம் பதித்தார் பாரதிராஜா.இப்படம் பெரும் வரவேற்பினை சினிமா ரசிகர்களிடம் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

Advertisement

முதல் படத்திலேயே யாரும் எட்ட முடியாத உயரத்தினை அடைந்து முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் பாரதிராஜா.

இவரின் மகன் தான் மனோஜ் பாரதி ராஜா.1999ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார்.

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது.

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை சினிமாவில் பெறவில்லை.

பாரதிராஜாவின் மகன் சினிமாவில் சாதிக்காதது பெரும் சோகமாக இருந்தாலும் தற்போது இவர் இயக்குனராக உருவெடுத்துள்ளார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது.தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in