The Indian Times

இன்று பிறந்தநாள் காணும் ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் முருகதாஸ், இவர் இயக்கத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர் தல அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.

Advertisement

இப்படத்திற்கு பிறகு விஜயகாந்தை வைத்து இவர் எடுத்த ரமணா படம் உலகளவு உள்ள ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

இப்படி அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களிலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர்

அதன்பின் சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கி ஹாட் ட்ரிக் வெற்றிக்கு சொந்த காரர் ஆகினார் முருக தாஸ்.

இவ்வாறு வெற்றிப்படங்களை மட்டும் கொடுத்து வந்த முருகதாஸ்,சமீப காலமாக இவர் இயக்கத்தில் வெளியாகிய படங்கள் சரியான வரவேற்பினை பெறவில்லை.

இதனால் நீண்ட நாட்கள் எடுத்து தற்போது சிவகார்திகேயனுக்காக புதிய கதை ஒன்றை தயார் செய்து இருக்கிறார்.

Advertisement

இது நடிகர் சிவகார்திகேயனின் 23வது படம் ஆகும்.இப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முருகதாஸ் இன்று அவரின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் முருகதாஸின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in