The Indian Times

60வயதில் இரண்டாவது மனைவியுடன் ஊர் சுற்றும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

தில் படத்தில் போலீசாக வந்து அனைவரையும் தனது நடிப்பினால் மிரட்டி இருப்பவர் ஆஷிஷ் வித்யார்த்தி,

இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் மைல் கல்லாக அமைந்தது என்றே கூறலாம்,இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வில்லன் நடிகராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.

Advertisement

இப்படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார்,இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் நடிகர் ஆக கலக்கி வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியாகிய தில், கில்லி ,பகவதி,ஏழுமலை ,ஆறு போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை ஆகும்.அதிலும் கில்லி படத்தில் தளபதிக்கு அப்பாவாக நடித்து அசத்தியிருப்பார்,

தற்போதும், வில்லனாக பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்,மேலும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஆஷிஷ் வித்யார்த்தி,இந்நிலையில் இவர் தனது 60 வயதில் தற்போது மீண்டும் ஒரு கல்யாணத்தை செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவர் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் ரூபா என்பவரை இரண்டாவது முறையாக மணந்துள்ளார்.தற்போது இவர் இரண்டாவது மனைவியுடன் வெளிநாடுகளை சுற்றி வருகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in