தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் மாரிமுத்து,இவர் பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் என்ற படத்தை இயக்கி சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகம் ஆகினார்,
ஆரம்பகாலத்தில் நடிகர் ராஜ் கிரனிடம் இவர் உதவி இயக்குனராக பணியாற்றினார் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார் மாரிமுத்து
மேலும் இவர் தற்போது நடித்து வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
அதற்கு காரணம் இவரது வில்லன் கதாபாத்திரம் தான்,இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
மேலும் அண்மையில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்து வந்தார்.
இந்நிலையில் சில தினம் முன்பு மாரடைப்பால் காலமாகியுள்ளார் மாரிமுத்து.
எதிர்நீச்சல் சீரியலின் டப்பிங் பனியின் பொழுது நெஞ்சு வலி ஏற்படவே உடனே தனியாக காரை எடுத்து கொண்டு மருத்துவமனை சென்றுள்ளார்.
செல்லும் வழியில் தனது மனைவிக்கு மட்டும் தான் எங்கே செல்கிறேன் என்பதை தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனி மருத்துவமனையில் அனுமதியாகிய இவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இவர் இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in