The Indian Times

நீங்க தான் எனக்கு எல்லா மே.. புகைப்படங்களை வெளியிட்டு அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.

Advertisement

ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்,

மேலும் பாலிவுட்டிலும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார், இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தற்போது இன்று இவரின் தாயாரின் பிறந்தநாள் என்பதால் அவரின் புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in