The Indian Times

இரண்டாவது மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய நடிகர் கின்னஸ் பக்ரு

டிஷ்யூம் படத்தில் அமிதாப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கின்னஸ் பக்ரு.இப்படத்தில் இவரின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார் பக்ரு,

Advertisement

மலையாள நடிகர் ஆன இவர் முதன் முதலில் 1986ஆம் ஆண்டு மலையாள படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகி இன்று தனது கடின உழைப்பினால் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உருமாறியுள்ளார்.

திறமைக்கு உயரம் தேவை இல்லை என நிரூபித்தவர் கின்னஸ் பக்ரு.இவர் டிஷ்யூம் படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்துவிட்டார்.

அற்புத தீவு,தலையெழுத்து,காவலன் 7ஆம் அறிவு படத்திலும் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

மேலும் அண்மையில் பிரபுதேவா நடிப்பில் வெளியான பகீரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் கின்னஸ் பக்ரு.மேலும் இவர் மலையாளத்தில் ஒரு படத்தினை இயக்கியும் உள்ளார்.

இவருக்கு 2006ஆம் ஆண்டு திருமணம் ஆகியது.ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக மீண்டும் அழகிய பெண்குழந்தை பக்ருவுக்கு பிறந்துள்ளது.

Advertisement

தனது இரண்டாவது மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார் பக்ரு

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in