ஹிந்தி சினிமா என்ட்ரி? BOLLYWOOD சூப்பர் ஸ்டார்களுடன் நடிகர் சூர்யா… வைரலாகும் புகைப்படம்

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .

ஹிந்தி சினிமா என்ட்ரி? BOLLYWOOD சூப்பர் ஸ்டார்களுடன் நடிகர் சூர்யா... வைரலாகும் புகைப்படம் 1

விளம்பரம்

நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் .தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடித்து இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.

ஹிந்தி சினிமா என்ட்ரி? BOLLYWOOD சூப்பர் ஸ்டார்களுடன் நடிகர் சூர்யா... வைரலாகும் புகைப்படம் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து சூர்யாவின் 43வது படத்தை இயக்குனர் சுதா கொங்கராவ் இயக்க உள்ளார்.இப்படத்தில் இவருடன் துல்கர் சல்மான்,நஸ்ரியா நடிக்க உள்ளனர்.2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்,இப்படத்திற்கு படக்குழு புறநானுறு என பெயரிட்டுள்ளது.இந்நிலையில் நடிகர் சூர்யா ஹிந்தி நடிகர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.இதனால் ஹிந்தி சினிமாவில் சூர்யா நடிக்க போகிறாரா என எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது.

ஹிந்தி சினிமா என்ட்ரி? BOLLYWOOD சூப்பர் ஸ்டார்களுடன் நடிகர் சூர்யா... வைரலாகும் புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment