The Indian Times

குடும்பத்துடன் WEEK END-யை கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.

ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது.மேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது.இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது.

Advertisement

இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

அதேபோல் தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.அடுத்ததாக ரகு தாத்தா படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

தற்போது இவர் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடி புகைப்பங்களை வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in