The Indian Times

சந்தோஷ் சுப்ரமணியம் நாயகி ஜெனிலியா திருமண புகைப்படங்கள்

நடிகை ஜெனிலியா தமிழில் குறைந்த அளவு படங்களே நடித்திருந்தாலும் மிகவும் பிரபலமான நடிகை.காரணம் அவர் நடித்த படங்களில் அவரது கதாபாத்திரம் அப்படி.துஜே மெரி கசம் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் நடிகை ஜெனிலியா.

இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய பாய்ஸ் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அதை சரியாக பயன்படுத்தி தமிழில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார் ஜெனிலியா.இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார் ஜெனிலியா

பின்னர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய சச்சின் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவே அதிலும் நடித்து அசத்தினார்.பின்னர் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த படத்தில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.

குழந்தை போல நடித்து அனைவரையும் அசத்தினார் ஜெனிலியா.தமிழில் இவருக்கு பெரும் வரவேற்பு இருந்தாலும் இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் சரியாக வரவில்லை என்று தான் கூற வேண்டும்.இறுதியாக மீண்டும் தளபதி விஜய்க்கு ஜோடியாக 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் படத்தில் நடித்தார்

அதன் பின்னர் அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கினார்.இவர் நடிகர் ரித்திஷை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இவரின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in