The Indian Times

மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் சந்தித்து பேசிய கமல்ஹாசன்

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார்.

களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு படம் நடிப்பையும்,கேரக்டர்களையும் மாற்றி மாற்றி புதிய சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளவர் இவர்.

Advertisement

படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.

அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.

இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு அக்ஷரா ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.இரண்டு மகள்களும் தற்போது சினிமாவில் நடிகைகளாக கலக்கி வருகிறார்கள்.

இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.மேலும் அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் ஜெயம் ரவி,துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்க உள்ளனர்.இப்படத்திற்கு படகுழு தக் லைஃப் என பெயரிட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகிய மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in