The Indian Times

மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட நடிகை க்ரிதி ஷெட்டி

உப்பெண்னா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகியவர் க்ரிதி ஷெட்டி.இதுதான் இவருக்கு முதல் தெலுங்கு படம் ஆகும்.

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து இவருக்கென தெலுங்கில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

Advertisement

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களான நானியின் ஷியாம் சிங்கா ராய் மற்றும் நாக சைதன்யாவின் பங்கராஜு படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.

தெலுங்கு சினிமாவிற்கு புதிய அழகிய நடிகை கிடைத்துள்ளது அங்குள்ள ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து மேலும் பட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் க்ரிதி ஷெட்டி.இவருக்கு தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழில் ரசிகர்கள் உள்ளனர்.தற்போது இவர் ராம் போதினினி கதாநாயகனாக நடித்துள்ள தி வாரியார் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் அண்மையில் வெளியாகியது.மேலும் இவர் தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆக உள்ளார்.இந்த படத்திற்கு இவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.தற்போது இவர் மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in