The Indian Times

பிரம்மாண்ட சொகுசு கார் வாங்கிய VJ அர்ச்சனா

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே.சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கியவர் அர்ச்சனா.

1999 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகினார்.

Advertisement

இதுவே இவரது முதல் தொலைக்காட்சி என்ட்ரி ஆகும்.பின்னர் அங்கிருந்து சன் டிவியில் வாய்ப்பு கிடைக்கவே தொகுப்பாளராக களம் இறங்கினார்.

இவர் முதல் முதலாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி காமெடி டைம்.இந்த நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை மக்களிடம் அளித்தது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

எல்லா தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பணியாற்றி விட்டார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார்.அர்ச்சனா.

இந்த நிகழ்ச்சி மூலம் இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் பெரும் வரவேற்பும் கிடைத்தது.இதனை தொடர்ந்து தொகுப்பாளராகவே தனது வாழ்க்கையை தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறார்.

Advertisement

இவருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.அம்மாவை போல சுறுசுறுப்பான இவரும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார்.மேலும் யூடியூப் சேனல்கள் வைத்தும் இருவரும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.இவர்களின் யுடியூப் சேனலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளதுதற்போது இவர் புதிய கார் வாங்கியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in