The Indian Times

மகளிருக்கான கிரிக்கெட் உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்த நடிகை மீனா

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.

Advertisement

தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார்.மீனாவின் முகத்தில் அந்த பழைய சிரிப்பை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் ஏங்கி வந்தனர்.

Advertisement

தற்போது கணவர் இறப்பில் இருந்து மீண்டு வரும் மீனா,தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி வெளியே சென்று இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.இந்நிலையில் நடிகை மீனா பாரிசில் 2023 ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட் உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்துள்ளார்,இந்திய நடிகை உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்தது இதுவே முதல்முறை என்ற பெருமையையும் பெற்றார் நடிகை மீனா

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in