The Indian Times

நடிகை மீராஜாஸ்மின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் தான் தமிழ் படங்களில் தற்போது நடிக்காவிட்டாலும் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தில் இருப்பார்கள்.அதில் ஒரு கதாநாயகி தான் மீரா ஜாஸ்மின். தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் இவர்.

இப்படத்திற்கு பிறகு மீரா ஜாஸ்மினுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக சினிமாவில் உருவெடுத்தார் மீரா ஜாஸ்மின்.

Advertisement

இவர் தமிழில் மட்டுமில்லை மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் அது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகிய சண்டக்கோழி படம் தான்.

இப்படத்திற்கு தற்போது வரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தனது எதார்த்தமான குழந்தை போல நடிப்பினால் ரசிகர்களை தனது வசம் இழுத்தார் மீரா ஜாஸ்மின்.

இவர் தற்போது தமிழில் படங்கள் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.ஆண்டுக்கு ஒரு படம் மலையாளத்தில் மட்டும் நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின்.

இவரை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில் தற்போது மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்,இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இவரின் அழகிய குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in