The Indian Times

அம்மா மற்றும் தம்பியுடன் நடிகை நிவேதா பெத்துராஜ் புகைப்படங்கள்

மதுரை மாவட்டத்தினை சேர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.நடிப்பின் மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேட தொடங்கினார்.இவருக்கு இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி நடிகர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக ஒரு நாள் கூத்து படத்தில் நடித்தார்.இப்படத்தின் மூலம் இவர் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

Advertisement

இப்படத்தில் இடம்பெற்ற அடியே அழகே பாடல் மாபெரும் ஹிட் அடித்தது.இதன்மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த டிக் டிக் டிக் திரைப்படம் இவர் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தின் மூலம் சினிமாவில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியது.

தமிழில் மட்டும் இல்லாமல் தற்போது தெலுங்கிலும் களம் இறங்கி அசத்தி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.அண்மையில் இவர் நடிப்பில் தெலுங்கில் விரத பர்வம் படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் தற்போது சரியாக அமையாததால் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார் நிவேதா.இவருக்கு அடுத்ததாக தெலுங்கில் பிளடி மேரி திரைப்படம் வெளியாக உள்ளது.

தமிழிலும் நல்ல கதைக்காக காத்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.சித்ரல்காரி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகியவர் தற்போது வரை வெற்றிநடை போட்டு வருகிறார்.

இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in