The Indian Times

நீ தானே என் பொன்வசந்தம் பட சமந்தா மாதிரியே இருக்கீங்க… ஜனனியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்டவர் .மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்

ஜனனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி

Advertisement

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

இது தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,

தற்போது ஜனனிக்கு படவாய்ப்புகள் வந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் ஜனனி லியோ படத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டு வந்தது.இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பினையும் வெளியிடாமல் உள்ளார் ஜனனி.

தற்போது இவர் பள்ளி பெண் கெட்டப்பில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே நீ தானே என் பொன்வசந்தம் பட சமந்தா மாதிரியே இருக்கீங்க என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in