The Indian Times

சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் விஜய லட்சுமி.

அதன்பின் வெங்கட் பிரபுவின் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்தி,2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

Advertisement

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து அஞ்சாதே,சரோஜா என பல தமிழ் படங்களில் நடித்தார்.

தொடர்ந்து வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து தனக்கென விஜயலட்சுமி சிறிய ரசிகர்கள் கூட்டத்தினையும் உருவாக்கினார்.

ஹீரோயின் என்றால் அதிக மேக்கப் போட்டு கவர்ச்சி உடையில் மட்டுமில்லை சுடிதாரில் குறைந்த மேக்கப்பிலும் வரலாம் என நிரூபித்தவர் இவர் .

பின்னர் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாயகி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரைக்குள் நுழைந்தார்,

இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததால் நாயகி நாடகத்தில் இருந்து அவர் வெளியேறினார்.பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின்னர் இவருக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.

Advertisement

தற்போது இவர் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in