The Indian Times

குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகர் லிவிங்ஸ்டன் புகைப்படங்கள்

1982 ஆம் ஆண்டு வெளியாகிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர் லிவிங்ஸ்டன்.

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்,இவர் நடித்த பல படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியையும் பெற்று கொடுத்தது.

Advertisement

தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.கதாநாயகனாக ,நகைச்சுவை நடிகராக சினிமாவையே கலக்கியவர் லிவிங்ஸ்டன்.

இவருக்கு ஜோவிதா, ஜெம்மா என இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பூவே உனக்காக’ என்ற தொடரில் கதாநாயகி பூவரசி என்ற கேரக்டருக்கு தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பின்னர் உயர்படிப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

பின்னர் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அருவி நாடகத்தில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் லிவிங்ஸ்டன் குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in