The Indian Times

மழையால் நின்று போன ஏஆர் ரஹ்மான் கச்சேரி… சோகத்தில் புகைப்படங்களை வெளியிட்ட இசைப்புயல்

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருபவர் ஏஆர் ரஹ்மான்.இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.

இவர் இசைக்கேனே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

Advertisement

இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான்.

இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.அண்மையில் இவர் இசையில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் , பத்துதல படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

ஏஆர் ரஹ்மானின் மகனும் பாடகராக சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் இன்று ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரி நடைபெற இருந்தது,ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் பெய்த கனமழையால் கிரவுண்டில் மழை நீர் தேங்கியுள்ளது.

Advertisement

இதனால் நிகழ்ச்சி ரத்தாகியதாக ஏஆர் ரஹ்மான் சோகமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in