The Indian Times

“சினிமாவை விட்டே போய்டலாம்ன்னு தோணுச்சு!” மன வேதனைகளை கொட்டி தீர்த்த அஸ்வின்! Ashwin Latest Interview After Trolls

தமிழ்நாட்டில் உள்ள கன்னிப்பெண்களின் காதலனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின்! ரம்மியமான தோற்றம், அளவான உயரம், அழகான சிரிப்பு, அம்சமான தாடி என பெண்கள் விரும்பும் அத்தனை விஷயங்களையும் அடக்கியுள்ள கோவை தமிழன் தான் அஸ்வின்! ஆனால், இவரை நாளுக்கொரு விதமாக செல்லப்பெயர்கள் வைத்து வித விதமாக ரசிகர் பட்டாளம் இவரை கொண்டாட காரணமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்!

Advertisement

அழகா இருக்கும் ஆண்களை பொதுவாகவே பெண்களுக்கு பிடிக்கும்! அதிலும், அசத்தலாக சமைத்தால் இன்னும் கூடுதல் அழகே! அதுபோல இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமைத்து அசத்தியது நாடகங்களில் இவர் நடித்ததை விட பல மடங்கு பெயரையும் புகழையும் தேடி தந்தது! அதே வேகத்தில் பல ஆல்பம் பாடல்களும் நடிக தொடங்கினார்! அந்த பாடல்களும் இவருக்கு பெருவாரியான வெற்றியை தேடி தந்தது! தற்பொழுது குக் வித் கோமாளியின் மற்றுமொரு பிரபலமான புகழோடு இணைந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படமும் நடித்து வருகிறார்!

இதனையடுத்து அந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது! ஆனால் இசை வெளியீட்டு விழா மேடையில் அவர் பேசிய தலைக்கனப் பேச்சு அவரை கீழே தள்ளியது. அனைவரும் இவரை இன்று வரை வச்சு செய்து வருகின்றனர். சில நாட்களாக மௌனத்தில் இருந்த இவர், பொங்கலுக்கு இவர் படம் வெளியாகவுள்ளதால் மக்களுக்கு பேட்டி ஒன்று வழங்கியுள்ளார். அதில் தன்னிம்பிக்கையுடன் பேசியுள்ளார். அந்த விடியோவை நீங்களும் பாருங்கள்! Watch The Video Below!…

https://www.youtube.com/watch?v=Q-VYofCntO8&t=79s

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in