The Indian Times

D Block – Official Trailer | Arulnithi, Avantika | Eruma Saani | Vijay Kumar Rajendran | MNM Films

தமிழ் சினிமா உலகில் நடிப்பில் கைதேர்ந்த நடிகர் என்றால் அது அருள்நிதி தான்! தொடர்ந்து படங்கள் நடிக்கா விட்டாலும், சிறந்த கதையை தேர்தெடுத்து அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களுக்கு நல்ல படங்களை மட்டும் கொடுப்பதில் அதிக ஆர்வத்துடன் இருந்து வருகிறார். அதனாலேயே இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

Advertisement

அது மட்டும் இல்லாமல் சினிமாவை நேசிக்கும் நபர்கள் பலரும் அருள்நிதியின் நடிப்பை பாராட்டாமல் இருந்ததே கிடையாது. இப்பொழுது D BLOCK என்ற படத்தில் நடித்துள்ளார். வழக்கம் போல அந்த இந்த படத்திலும் புதுமைக்கு பஞ்சமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் கதையாகவே காணப்படுகிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஹீரோயின் நடித்துள்ளார்.

Advertisement

மேலும், எருமை சாணி யூட்யூப் சேனல் புகழ் விஜய், உமா ரியாஸ், கரு.பழனியப்பன், என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். கல்லூரியில் நடக்கும் சில மர்மங்கள் மற்றும் கொலைகள் என பல சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைந்துள்ளதாக படத்தின் ட்ரைலரை பார்க்கும் பொழுது நன்றாகவே தெரிகிறது. இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் D BLOCK படத்தின் ட்ரைலரை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in