The Indian Times

சூர்யாவை பாராட்டிய அஸ்வின் – எதற்காக தெரியுமா..?

பல நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தாலும் சூர்யா நடிக்கும் படம் என்பது முக்கியமான பங்கையே கொடுத்து இருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக சூர்யா தனது ரசிகர்களை கவரும் வகையில் படம் எடுக்க வில்லையே என்று பல தரப்பட்ட ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை சம்பாதித்தது. இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இருந்த படம் தான் சூரரை போற்று.

Advertisement

இந்த படம் ஓடிடி யில் வெளியாகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் ஆஸ்கார் விருதுக்குத் தேர்வாகி உள்ளது. பல நடிகர்கள் சூர்யாவை பாராட்டி இருந்தாலும் சூர்யாவின் உழைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யா தன்னுடைய முழு கடின உழைப்பையும் போட்டு இருக்கிறார். மேலும் இந்த படத்தை கிரிக்கெட் வீரர் ஒருவர் பார்த்து பாராட்டி இருக்கிறார்.

Advertisement

மேலும் அவர் சூர்யா நடிப்பை பார்த்து விட்டு பிரமித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி வீரர்களில் ஒருவரான ரஹானே தான் அவர். அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். ரசிகர்களில் ஒருவர் நீங்கள் சமீபத்தில் பார்த்த படம் எது என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அவர் தமிழ் படமான சூரரை போற்று என்று கூறியுள்ளார்.

இந்த படத்தை அவருக்கு அஸ்வின் பரிந்துரை செய்ததாகவும், இந்த படத்தை பார்க்கும் போது சூர்யாவின் நடிப்பு வியக்கும் வகையில் அமைந்தது என்றும் பாராட்டு தெரிவி்த்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் மட்டும் இன்றி பல துறைகளில் உள்ளவர்களிடமிருந்து இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in