The Indian Times

Maanaadu Official Teaser – STR | Venkat Prabhu

நடிகர் சிம்பு கடைசியாக சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் காணப்பட்டார் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. இந்நிலையிலில் அடுத்த படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இயந்துள்ள சிம்பு மாநாடு படத்தில் நடித்துவந்தார். இந்த படம் சிம்புவுடன் வெங்கட் பிரபுவின் முதல் படமாகும், இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் மாநாடு குழு சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு டீஸரை இன்று வெளியிட்டுள்ளது. இந்த டீஸர் தமிழ் தெலுங்கு மலையாள ஹிந்தி என மொழிகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த இந்த டீசேர்களும் அந்தந்த மொழியின் சினிமா பிரபலன்கள் வெளியிடுகின்றனர். இப்போது பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், மானாடு டீசரின் இந்தி பதிப்பை வெளியிடுவார். என்பது தெரிய வந்துள்ளது. டோலிவுட் நட்சத்திரம் ரவி தேஜா தெலுங்கு டீஸரை வழங்கவுள்ளார். மலையாள டீசரை வெளியிட பிருத்விராஜ் சுகுமாரன் தயாரிப்பாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

படத்தின் கோலிவுட்டில் இருந்து டீஸரை யார் வெளியிடுவார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சுரேஷ் காமாச்சி தயாரித்த வெங்கட் பிரபுவின் மாநாடு , சிம்பு அப்துல் கலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடித்துள்ளனர், மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in