The Indian Times

மகள் பிறந்த சந்தோஷத்தில் செழியன்.. விடாமல் துரத்தும் மாலினி… பாக்கியலட்சுமி ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது செழியன் மாலினி உடன் நெருங்கி பழகி வருகிறார்,அவர் தவிர்க்க நினைத்தாலும் மாலினி செழியனை விடாமல் துரத்துகிறார்.ஏற்கனவே வீட்டில் அப்பா கோபி செய்த வேலை காணாது என மகன் செழியனும் ஆரம்பித்துள்ளார் மேலும் ஜெனி நிறைமாதமாக உள்ளார்,அவருக்கு தற்போது பிரசவவலி ஏற்பட்டு உள்ளது.அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் செழியனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது,அதே சமயத்தில் மாலினி அவருக்கு போன் செய்கிறார் , அதனை செழியன் தவிர்க்கவே உடனே நீ வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுகிறார்,இவரின் நடவடிக்கையின் மேல் பாக்கியாவுக்கு தற்போது சந்தேகம் வர தொடங்கியுள்ளது,

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in