The Indian Times

இனி கோபி இந்த வீட்டுல தான் இருப்பான்… போதையில் கிடந்த கோபியை பாக்கியா வீட்டுக்கு அழைத்து வந்த ஈஸ்வரி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இனியாவால் ஏற்பட்ட பிரச்னையை தாங்க முடியாமல் கோபி அதிகளவு குடிக்கிறார்.குடித்துவிட்டு ரோட்டிலேயே விழுந்து விடுகிறார்.உடனே பாக்கியாவுக்கு போன் வரவே எழிலை அழைத்துக்கொண்டு கோபியை அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று விடுகிறார்,உடனே கடுப்பாகிய ராதிகா நீ யாரு இவரை கூட்டிட்டு வர என கேட்கவே ,தோழியோட புருஷன் என்ற மனிதாபிமானத்தில் தான் கூட்டிட்டு வந்தேன் என ராதிகாவுக்கு பதிலடி கொடுத்து செல்கிறார்.இதனால் கடுப்பாகிய ராதிகா அடுத்த நாள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

மீண்டும் சமாதானப்படுத்தி ராதிகாவை வீட்டுக்கு அழைத்து வந்து கோபி மீண்டும் குடிக்கிறார்.குடிபோதையில் கிடந்த தந்தையை செழியன் வீட்டிற்கு கூட்டி வர ஈஸ்வரியும் இனி கோபி இங்கே தான் இருப்பான் என அனைவரிடமும் சண்டையிட்டு கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் இதற்கு ராதிகா கொடுக்கபோகும் ரியாக்சனை பார்க்க ஆவலாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in